'’ எனது சித்தப்பா ஒரு இரும்பு மனிதர் ’’ - பிக்பாஸ் பிரபலம் தகவல்

சனி, 8 மே 2021 (20:43 IST)
தனது சித்தப்பா ஒரு இரும்பு மனிதர் எனக் கூறியிருக்கிறார் பிக்பாஸ் பிரபலம்.

ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் அருண்பாண்டியன், இவர் சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்தின் தேமுதிக கட்சி சார்பில் போட்யிட்டு எம்.எல்.ஏ ஆக இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இவரது மகள் பிரபல நடிகை கீர்த்தி  பாண்டியன் அருண்பாண்டியன் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், எனது தந்தை  அருண்பாண்டியன் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு இதய குழாய்களிலும் இரண்டு அடைப்புகள் இருந்தது அது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இப்பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் தனது ஒரு இரும்பு மனிதன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்