10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 28 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது..!

Mahendran

வியாழன், 13 ஜூன் 2024 (12:48 IST)
பத்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே குழந்தைகள் காப்பகத்தில் பத்து வயது சிறுவனுக்கு திடீர் என உடல்நிலை பாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை செய்தபோது அந்த விடுதியின் காப்பக நிர்வாகி முனீஸ்வரி என்ற 28 வயது பெண் அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 
 
இதனை அடுத்து இது குறித்து போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி இது குறித்து விசாரணை செய்தார். 
 
இந்த விசாரணையில் காப்பக நிர்வாகி முனீஸ்வரி, 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட முனீஸ்வரி, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்