சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் கைது

Siva

திங்கள், 3 ஜூன் 2024 (08:22 IST)
சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தமிழ் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொளத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவர் தமிழ் சினிமா தயாரிப்பாளராக இருந்து வரும் நிலையில் இவரது அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் முகமது அலி தனக்கு திருமணமானதை மறைத்து தன்னை காதலிப்பதாக கூறியதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

மேலும் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து பதிவு செய்து தன்னை மிரட்டுவதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி தான் கர்ப்பமானதாகவும் ஆனால் சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை எனக்கு கொடுத்து கருவை கலைத்துள்aளதாகவும் கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்த இளம்பெண் புகாரில் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இளம் பெண்ணின் புகார் உண்மை என தெரியவந்துள்ளதை அடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்