இளம்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்த ஜிம் பயிற்சியாளர்.. புகார் அளித்ததும் தலைமறைவு.!

Siva

செவ்வாய், 11 ஜூன் 2024 (16:42 IST)
சென்னை ஆவடி அருகே இளம்பெண் ஒருவர் உடல் பருமனை குறைப்பதற்காக ஜிம்மிற்கு சென்ற நிலையில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ஜிம் பயிற்சியாளர் மிரட்டி உள்ள நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், உடனடியாக ஜிம் பயிற்சியாளர் தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை ஆவடியை சேர்ந்த இளம் பெண் மருத்துவமனையில் அட்மின் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் இவர் உடல் பருமனை குறைப்பதற்காக திருமுல்லைவாயலில் இருந்த ஜிம்முக்கு சென்றார்.

அப்போது ஜிம் பயிற்சியாளர் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நெருங்கி பழகியபோது இளம்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதில் குமாரின் தோழி நித்யாவும் சம்பந்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நிர்வாண வீடியோவை தன்னிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாகவும் பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டியதாகவும் இளம் பெண் புகார் குமார் மற்றும் அவரது தோழி நித்யா மீது அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் ஜிம் பயிற்சியாளர் குமார் மற்றும் அவருடைய தோழி நித்யா ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்