பொள்ளாச்சி சம்பவம்: வருவாய் கோட்டாட்சியரிடம் 2 மாணவிகள் மனு

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (11:39 IST)
பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என 2 மாணவிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் 2 மாணவிகள் மனு அளித்துள்ளனர்.
 
பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு உள்பட நால்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி  பொள்ளாச்சி, கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் பள்ளி மாணவிகள் இருவர் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் பொள்ளாச்சி சம்பவம் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவன்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்