திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் திமுகவின் சமூக வலைத்தளங்களை கவனித்து கொள்ளும் ஐடி விங் தலைவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறான செய்திகளை சபரீசன் தூண்டுதலின்பேரில் வெளியாகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பொருத்தவரை எதிர்க்கட்சிகள் உண்மையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதை விட இந்த விவகாரத்தை வைத்து அதிமுகவின் செல்வாக்கை குறைத்து அரசியல் லாபம் தேடவே அதிகம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உண்மையாகவே குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால் கமல்ஹாசன் போல் திமுக தரப்பினர் காவல்துறையினர்களிடம் புகார் அளித்திருப்பார்கள் என்றும் அதனை செய்யாமல் சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்பி வருவதால் திமுகவின் மீது சந்தேகம் ஏற்படுவதாகவும் நெட்டிசன்களில் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.