இந்த ஆண்டு 2 நிதிநிலை அறிக்கைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (11:51 IST)
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி இந்த ஆண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகள் வெளியிடப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து, ரூ4000 நிவாரண நிதி உள்பட பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
 
அந்த வகையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இந்த ஆண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சற்றுமுன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விரைவில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்