டி.டி.எஃப் வாசனுக்கு 15 நாள் சிறை: நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:49 IST)
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரப்பட்டுள்ளார் 
 
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டிடிஎப் வாசன் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர் வீலிங் செய்ய முயன்ற போது விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். 
 
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் இயக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர். 
 
அப்போது டிடிஎப் வாசனை அக்டோபர் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து அவர் 15 நாள் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்