தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து ஜனசேனா போட்டி- நடிகர் பவன்கல்யாண்

வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:54 IST)
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு  ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது ஆந்திர பிரேதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று மத்திய சிறையில் சந்திரபாபு  நாயுடுவை சந்தித்த பின், சிறை வாயிலில், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்..

அப்போது அவர் கூறியதாவது:  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தாங்க முடியாது. எனவே அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும் ஜனசேனா கட்சியும் இணைந்து செயல்படும் என்று கூறினார். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் மகன் மற்றும் அவரது மைத்துனர் பாலகிருஷ்ணா ஆகியோர் இருந்தனர்.

சமீபத்தில்,  ''மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் சந்திரபாபு நாயுடு என்றும் பொய் வழக்குகள் மற்றும் சட்டவிரோத கவிதைகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது'' என்றும் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்