திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே 8 வயதான சிறுமியை 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வீடுபுகுந்து பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் கட்டிடத்தொழில் செய்யும் ஒரு நபர் தனது மனைவியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சி சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயதான அவரது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அந்த சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சிறுமியின் வீட்டுக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளான்.
இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார். இந்த அழு குரல் கேட்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது சிறுமி காயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். அதன் பின்னர் சிறுமியின் தாய் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். போலீசார் அந்த பலாத்காரம் செய்த மாணவனின் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது அந்த மாணவன் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவன் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளான்.