11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அரசு தேர்வுத்துறை இயக்குனர் தகவல்..!

Mahendran
சனி, 11 மே 2024 (13:56 IST)
ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை அரசு தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொது தேர்வு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் இந்த பொது தேர்வில் தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு ஆசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் முடிவுகள் வெளிப்பட வெளியாக உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 90%க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் 11-ம் வகுப்பு தேர்விலும் அதிகளவு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்