பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

Siva

வெள்ளி, 10 மே 2024 (09:48 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம்  91.55%  என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 91.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இதிலும் மாணவிகளே அதிகம் உள்ளனர்.

மேலும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றும், மாணவர்கள் 88.58% என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in/, http://dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்