60 வயதாகும் தினேஷ், இதுவரை திருமணம் செய்யாமல் இருந்த நிலையில், திடீரென அவரது வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றதாகவும், இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த திருமணத்திற்கு பாஜக பிரமுகர்கள் மட்டுமின்றி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 60 வயதில் பாஜகவின் பிரமுகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டது, பாஜக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.