10 ஆம் வகுப்புக்கு மார்க் எப்படி வழங்கப்படும்? முதல்வர் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (12:49 IST)
தமிழகத்தில் 10 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மார்க் எப்படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆர்பாட்டம் நடத்துவதற்கான கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கூடவே 11 ஆம் வகுப்புக்கான நிலுவையில் இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர 12ம் வகுப்புக்கு நடைபெற வேண்டிய தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்