ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.. அண்ணாமலை

Mahendran
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:23 IST)
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிந்து வருத்தமடைந்தேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்தில் திடீர் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு அடிவயிறு பகுதியில் ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ரஜினிகாந்த் உடல் நலத்தின் குறித்த அறிவிப்பை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்னும் சில நிமிடங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
மதிப்புக்குரிய சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த்  அவர்கள், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். உலக அளவில் பொதுமக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் திரு 
ரஜினிகாந்த்   அவர்கள், விரைந்து நலம் பெற்று, தனது கலைப் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்