ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி… லதா ரஜினிகாந்த் அளித்த விளக்கம்!

vinoth

செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:02 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் வெளியாகிக் கவனம் ஈர்த்தது.

படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் இன்று மாலை டிரைலர் வெளியாகவுள்ளது. இது குறித்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக இருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் இல்லையென்றும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்தின் மனைவி லதா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்