காலிப்ளவர் - 1
முட்டை - 6
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3 (பொடியாக)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் - தேவையான அளவு,
பெருஞ்சீரகம் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - தேவைக்கேற்ப
செய்முறை:
எடுத்துக்கொண்ட காலிபிளவரை சிறிதாக நறுக்கி, சூடான நீரில் 5 நிமிடம் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையான பொருட்களை ஒன்றன் பின்னர் ஒன்றாக சேர்க்கவேண்டும். அதாவது பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவை நன்கு வதங்கியதும் காலிபிளவரை சேர்ந்து வதக்க வேண்டும். காலிப்ளவர் நன்கு வதங்கிய பதத்திற்கு வந்ததும், மிளகாய்பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், அதில் முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது நேரம் கழித்து கிளறி, முட்டை உதிரியாக வரும் வேளையில், அடுப்பில் இருந்து இறக்கவும். காலிப்ளவர் முட்டை பொடிமாஸ் தயார்.