சுவையான மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி...?

செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:37 IST)
தேவையான பொருட்கள்:

பெரிய மற்றும் நீளமான மிளகாய் - 10
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 3 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, ஓமம் மற்றும் சாட் மசாலா சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மிளகாயை நன்கு நீரில் கழுவி, பின் நன்கு உலர வைத்து, நீளவாக்கில் இரண்டாக கீறி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விடவேண்டும்.  பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை மாவில் மிளகாயை பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு 4-5 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து மிளகாயையும் எண்ணெய்யில் பொரித்து எடுத்தால், சுவையான மிளகாய் பஜிஜி தயார். இவை தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்