ஏராளமான மருத்துவகுணம் மிக்க மூலிகை மஞ்சணத்தி !!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:40 IST)
ஏராளமான மூலிகை மருந்துச்செடிகள், மரங்கள் நம்முடைய இடங்களில் அதிகம் காணப்படுகிறது. அப்படி மிகவும் மருத்துவ குணமிக்க மூலிகை சிறு மரம் நுணா.


மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனை தீர மஞ்சணத்தி வேரை எடுத்து கஷாயம் செய்து குடிக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் குறையும்.

மஞ்சனத்தி பட்டையை அரை தேக்கரண்டி ஜீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி அளவு காலை மற்றும் இரவு உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் காய்ச்சலை தடுத்து வயிறு சம்பந்தமான எல்லா நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டது.

மஞ்சணத்தியின் இலை மற்றும் பழம் மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. சிறிது மிளகுத்தூள் மற்றும் சீரகத்தை பொடித்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கூடவே இந்த மஞ்சணத்தி இலை மற்றும் பழத்தின் விழுதுகளை சேர்த்து கொதிக்க வைத்து 50 மில்லி வீதம் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிக ரத்தப்போக்கு பிரச்சனைகள் நீங்கும். சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான அளவில் வைத்திருக்க இதை குடித்து வரலாம்.

மஞ்சணத்தி பழம் தொண்டை புண்ணுக்கு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

நொச்சி, உத்தமணி, பொடுதலை இலை சாற்றுடன் மஞ்சணத்தி இலைச்சாறும் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் எல்லா வகையான இரைப்பை பிரச்சனைகளும் முற்றிலும் நீங்கும். இது சளி மற்றும் காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்