முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

Mahendran

புதன், 16 ஜூலை 2025 (18:59 IST)
தலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக தலைமுடி உதிர்ந்து, அந்த பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். இது 'அலோபேசியா ஏரியேட்டா' என்ற நோய் காரணமாக ஏற்படும். தலையில் உள்ள முடிகள் மொத்தமாக உதிர்ந்து வழுக்கையுடன் காணப்பட்டால் அது 'அலோபேசியா டோட்டாலிஸ்'  என்று அழைக்கப்படும்.
 
இதற்கான சித்த மருத்துவம்: சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் போன்ற மருந்துகளைச் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
 
'டீனியா கப்பைடிஸ்' (Tinea Capitis) என்னும் பூஞ்சையால் சிலருக்குத் தலைமுடி உதிரும். இதற்கான சித்த மருத்துவம் என்னவெனில் சீமை அகத்தி இலைச் சாற்றைத் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசி வர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும்.
 
பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்து விழும் ஒரு பொதுவான நிலையாகும். இவற்றுக்கான சித்த மருத்துவச் சிகிச்சைகள் என்னவெனில் கரிசாலைச் சூரணம் 1 கிராம், அயப்பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்