கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் நாம் முழுமையாக பெற முடியும். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது.
கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்- ஏ வாக மாற்றம் அடைகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குகிறது. மேலும் மாலைக்கண் நோய் வராமல் இருக்கும். இதற்கு காரணம் விட்டமின் ஏ தான். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
வைட்டமின் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்கள், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்கள் கேரட்டில் அதிக அளவு உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது. கேரட்டை மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும், பற்களில் இருக்கும் கரைகளையும் நீங்கும்.
வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. இது பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் செய்து சாப்பிடலாம்.