அதிக மருத்துவகுணங்கள் அடங்கியுள்ள மரவள்ளி கிழங்கு !!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (14:43 IST)
கிழங்கு வகைகள் அனைத்திலுமே மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது அந்தவகையில் மரவள்ளி கிழங்கிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.


மரவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது.

மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். மரவள்ளிக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் கொழுப்புகளை நீக்கி ரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் சக்தி இந்த மரவள்ளிக் கிழங்கில் உள்ளது.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட பிறகோ இஞ்சி சுக்கு சாப்பிட கூடாது. ஏனென்றால் மரவள்ளிக் கிழங்கின் தன்மையால் அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.

மரவள்ளிக் கிழங்கில் உள்ள நார்ச்சத்து உணவை நன்றாக செரிக்க செய்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல், குடல் வலி, குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்