விநாயகரின் பெயரையாவது இடைவிடாது அன்று முழுவதும் ஜெபிக்கவேண்டும். உபவாசம் இருப்பதும் நன்று. இரவு சந்திரோதயம் ஆன உடன் சந்திரனை பார்த்துவிட்டு, அர்க்கியம் விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.
கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும். சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.