வாயில் உண்டான புண்களை விரைவில் குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை !!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:41 IST)
மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது.


கீரையில் அதிக அளவில் நீர்விட்டு சுண்டக்காய்ச்சி மிளகு, சீரகம், உப்பு போட்டு எண்ணெய் விட்டு தாளித்து குழம்பு போலத் தயார்செய்து உணவில் கலந்து உண்ணலாம்.

மணத்தக்காளிக் காயை தயிரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து வறுத்து உணவுடன் கலந்து சாப்பிடலாம். இதனுடன் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, தேங்காய் சேர்த்து தாளித்தும் உண்ணலாம்.

மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நல்ல பலனை தரும்.

இக்கீரையில் சாற்றைப் பிழிந்து தெடுத்து வாயில் ஊற்றிக் கொண்டு சிறிது நேரம் அடக்கி வைத்திருந்து பிறகு உமிழ்ந்தாலும் வாயில் உண்டான புண்கள் விரைவில் ஆறிவிடும். வாய் புண்ணால் வேதனைப்படுபவர்கள் இதன் சாறை எடுத்து வாய் கொப்பளித்து வரும் போது விரைவில் வாய்ப்புண் அகன்றுவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்