முகம் கழுவாமல் பவுடர் போட்டாலும் பரு வரும். பரு வந்து விட்டால் அதை நகம் படாமல் பாதுக்காப்பது நல்லது. சிலர் பருவை கிள்ளி விடுகின்றனர். அவ்வாறு செய்தால் பரு மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.
பரு வந்து விட்டால் அதை கிள்ள கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது.