இஞ்சி சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா...?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:13 IST)
இஞ்சியுடன் புதினா சேர்த்து துவையல் செய்து உண்டால் அஜிரணம் கோளாறு சரியாகி விடும் மற்றும் சுறுசுறுப்பாக என்றும் இளமையோடு வாழலாம்.


உணவில் ஏதாவது ஒரு வகையில் இஞ்சியை சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. இஞ்சி சாறும் தேனும் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்