எலுமிச்சையில் என்னவெல்லாம் மருத்துவகுணங்கள் உள்ளது தெரியுமா...?

வியாழன், 14 ஏப்ரல் 2022 (16:30 IST)
எலுமிச்சை பழத்தில் நிறைந்துள்ள சிட்ரிக் அமிலம் புற்றுநோய் வராமல் தடுத்து புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கிறது.


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு,  சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் இளைத்து உடல் பொலிவு உண்டாகும்.

படர் தாமரை, பூஞ்சை போன்றவற்றால் நமது தோலில் ஏற்படும் பாதிப்புகளின் மீது, எலுமிச்சம் பழ சாற்றை நன்கு தடவி வருவதால் தோல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்குகின்றன.

வாய்துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க தினமும் எலுமிச்சை சாறினை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் ஏற்படாது. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு அஜீரண கோளறு ஏற்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு குடித்தால் விரைவில் ஜீரணம் ஆகும்.

எலுமிச்சை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய் வராமல் தடுக்கிறது. எலுமிச்சையில் உள்ள புளிப்பு சுவை நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் அடைய செய்து பசியை தூண்ட செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்