தினம் ஒரு ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

Webdunia
ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன்  கிடைக்கும்.
ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.
 
ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.
 
ஆரஞ்சுப்பழம் பல் சொத்தையை தடுக்கிறது. பால் அருந்த பிடிக்காதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறு சாப்பிடலாம்.  இதனால் பாலில் கிடைக்கும் கால்சியம் சத்து  போல் ஆரஞ்சிலும் கிடைக்கிறது.
 
ஆரஞ்சு பழச்சாறு நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது.  ஆரஞ்சுப்பழச் சாற்றில் சிறிது சுடுநீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
 
ஆரஞ்சு பழச்சாறில் உள்ள சுண்ணாம்பு சத்து நெஞ்சு வலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய் போன்ற நோய்கள் குணப்படுத்துகிறது.
இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது.
 
வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும்  வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்