காலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (17:56 IST)
தினமும் காலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

 
பெரும்பாலும் வெந்நீர் மழை காலம், குளிர் காலம் அல்லது காய்ச்சல் போன்ற நேரங்களில்தான் எடுத்துக்கொள்வோம். மற்ற நேரங்களில் ஐஸ் தண்ணீர்தான். ஆனால் தினமும் காலை வெந்நீர் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
 
ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய துடிப்பு திடீரென அதிகரிப்பு, கொழுப்பு அளவு அதிகரிப்பு, இருமல், உடல்வலி, ஆஸ்துமா, நரம்பு தடிப்பு நோய்கள், வயிற்றுக் கோளாறு, பசியின்மை ஆகியவைக்கு தீர்வாக அமைகிறது.
 
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் வெந்நீர் பருக வேண்டும். வெந்நீர் குடித்தப்பின் 45 நிமிடங்கள் கழித்துதான் வேறு எதுவாக இருந்தாலும் உண்ணவோ குடிக்கவோ வேண்டும். இந்த இடைவெளி மிக அவசியம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்