உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடும் மருத்துவகுணங்கள் நிறைந்த கறிவேப்பிலை !!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:29 IST)
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலில் நோய் தொற்றை எதிர்த்து போராடுகிறது.


கறிவேப்பிலையில் இரும்பு சத்து, போலிக் அமிலமும் அதிகமாக நிறைந்துள்ளது. போலிக் அமிலம் உணவில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்சி உடலுக்கு கொடுப்பதற்கு உதவி புரிகிறது. இதில்  இரண்டு சத்துக்களும் நிறைந்துள்ளதால் இயற்கையான முறையில் உங்கள் இரத்த சோகையை போக்க உதவுகிறது.

கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டும் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலை சாப்பிடுவதால்  இன்சுலின் செயல்பாட்டை சீராக்கி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவை குறைப்பதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது.

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் சருமத்தை உயிர் சத்துடன் இருக்க உதவுகிறது. இயற்கை முறையில் சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவோர் தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.

கறிவேப்பிலை செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. இது உடல் எடை குறைய வழி செய்கிறது. உடல் எடை அதிகரிப்பது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்பதால் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

தினசரி உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதால் இரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்கும் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் LDL கெட்ட கொழுப்பை குறைத்து HDL நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்