ஞாபகமறதி நோய் வராமல் தடுக்கும் ப்ளூபெர்ரி !!

Webdunia
ஒரு கப் ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவதாலும் உடலுக்கு வைட்டமின் ஈ சத்தும் மற்றும் வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைத்துவிடுகின்றன.


வயதான காலத்தில் சிலருக்கு ஞாபக மறதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு இளமையிலேயே ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இதனை  போக்க தினமும் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால், இது மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்து ஞாபகமறதி நோய் வராமல் எதிர்க்கிறது.
 
வைட்டமின் சி மாத்திரை எடுத்துக் கொண்டால் 200 அளவுதான் சக்தி கிடைக்கும் ஆனால் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால் பல மடங்கு வைட்டமின் சத்து உடலுக்கு கிடைக்கும்.
 
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் அழுத்தத்தை வைட்டமின் சி சத்து போக்குகிறது. இப்பழத்தில் இருக்கும் 1200 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து, நச்சுக்  கிருமிகளை அழித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
 
தினமும் ஒரு கோப்பை (100 கிராம்) ப்ளூ பெர்ரி பழம் சாப்பிட்டுவந்தால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் வராது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து  கிடைக்கும்.
 
இதில் உள்ள வைட்டமின் சி சத்தும் வைட்டமின் ஈ சத்தும் ரத்தத்தில் கலந்து மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
 
வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைத்து சர்க்கரை நோயினை குணப்படுத்துகிறது. ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
 
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை ப்ளூபெர்ரி பழத்தை சாறாக்கி அருந்தலாம். அல்லது 2 கப் எடுத்து சாப்பிடலாம். இவ்வாறு எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்