தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?
வீட்டில் ஏற்படும் தீக்காயங்களுக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத முதலுதவிகள் குறித்த முக்கிய குறிப்புகள் இதோ.
செய்யக்கூடாதவை
தீக்காயம் மீது வெண்ணெய், மாவு, சமையல் சோடா போன்றவற்றைத் தடவ கூடாது.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஆயின்மென்ட் அல்லது எண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
தீக்காயத்தால் ஏற்படும் கொப்புளங்களை நீங்களாகவே உடைக்கவோ, கிள்ளவோ கூடாது.
தோலுடன் ஒட்டிக்கொண்ட சிந்தெடி ஆடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டாம்.
தீக்காயம் மீது பனிக்கட்டியை நேரடியாக வைக்கக்கூடாது.
உடனடி முதலுதவி
காயம் பட்ட இடத்திலுள்ள நகைகளை உடனடியாக அகற்றிவிடுங்கள்.
காயம் பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சிறு காயமாக இருந்தாலும், சுத்தமான துணியால் மூடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
முகம், கண் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டாலும், சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.