நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் உச்சந்தலை, முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியின் வேர்க்கால்களுக்கு ஒரு புரதம் போல செயல்பட்டு, அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
பயன்பாட்டு முறைகள்: நெல்லிக்காய் எண்ணெய்யாக, பொடியாக அல்லது சாறாகப் பயன்படுத்தலாம். வழக்கமான பயன்பாடு, முடியை உயிர்ப்புடன் காட்சியளிக்கச் செய்யும்.
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். நெல்லிக்காய், முடி உதிர்வைத் தடுக்கவும், முடியை வலுப்படுத்தவும், அடர்த்தியை அதிகரிக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் முடி பிரச்சனைகளுக்கு ஏற்ப, நெல்லிக்காயைப் பயன்படுத்தி ஆரோக்கியமான கூந்தலைப் பெறுங்கள்!