இரு கட்சிகளிடம் இருந்தும் விலகி இருக்க முடிவு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (09:39 IST)
தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிடம் இருந்து விலகி இருக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
மக்களவை தேர்தலில் பாஜகவை அடுத்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிகள் காங்கிரஸ், திமுக மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் தான். இதில் காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவை கடுமையாக தாக்கிய கட்சிகள் என்பதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்க பாஜக முன்வந்தது. ஆனால் இந்த பதவியை ஜெகன்மோகன் ரெட்டி பெற மறுத்துவிட்டார்.
 
துணை சபாநாயகர் பதவியால் தங்கள் கட்சிக்கும், மாநிலத்திற்கும் எந்த பயனும் இல்லை என்றும், ஆந்திர மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெறும் வரை காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிடம் இருந்து விலகியிருக்கவே விரும்புவதாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் நாட்டுக்காக பாஜக அரசு எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு ஆதரவு அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
கடந்த 2014ஆம் ஆண்டு தனிப்பெரும் கட்சியாக விளங்கிய அதிமுக, துணை சபாநாயகர் பதவியை பெற்றதால்தான் பின்னாளில் பாஜக சொன்னதையெல்லாம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த தவறை ஜெகன்மோகன் ரெட்டி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்