பாரதிய ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 66 வது நினைவு நாளையொட்டி, தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.
தமிழிசை பேசியதாவது, மழை பொய்த்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கை ஒருபுறம் எடுத்தாலும் இன்னொரு புறத்தில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. அதன் விளைவாகவே மழை பெய்தது.
திமுகவினர் யாகம் நடத்தினாலும், யோகா நடத்தினாலும் கேலி செய்கிறார்கள். ஆனால் தண்ணீருக்காக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தினால் மட்டும் தண்ணீர் வந்துவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவினர் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் மழை பெய்தது எனும் தமிழிசையின் கருத்தை சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் கேலி செய்து வருகின்றனர்.