ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க மறுத்ததால் இளைஞர் தற்கொலை

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (15:00 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க பெற்றோர்கள் மறுத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன் கேட்டுள்ளார். அவனது பெற்றோர்கள் கூலி வேலை செய்வதால் ஸ்மார்ட்போன் வாங்கி தர மறுத்துள்ளனர். 
 
இதையடுத்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவர் தனது வீட்டின் அருகே உள்ள கல்குவாரியில் உள்ள ஆழமான கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்