முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கலில் நடைபெற்ற ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் பேசிய சில கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து ஊடகங்களுக்கு வராமல் ஒதுங்கியே இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்பல்லோவுக்கு வந்தார். அதன் பின்னரும் ஒதுங்கியே இருந்த அவர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதும் தற்போது அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்.
தற்போது உள்ள அரசியல் சூழலில் சசிகலாவை எப்படி வீழ்த்துவது என ஆலோசிக்கும் ஓபிஎஸ் அணியில் முக்கியத்தலைவராக உள்ளார் நத்தம் விஸ்வநாதன். அவர் திண்டுக்கலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா எந்த குடும்பத்திடம் கட்சி சிக்கக்கூடாது என்று நினைத்தாரோ அந்த குடும்பத்தின் கையில்தான் தற்போது கட்சி சிக்கியிருக்கிறது. இதுவரை சசிகலாவை பற்றி 10 சதவீதம் மட்டுமே கூறியுள்ளோம் என்றார்.
மீதியை உண்மைகளை படிப்படியாக சொல்வோம். சசிகலாவை பற்றி சில உண்மைகளை வெளியில் சொன்னால் அந்த குடும்பத்தை தமிழகத்தைவிட்டே விரட்டி விடுவார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நத்தம் விஸ்வநாதன்.