பார்வையற்றவருக்கு உதவி செய்ய அங்கும் இங்கும் ஓடிய பெண்
கேரளாவில் பேருந்தை பிடிப்பதற்காக பார்வையற்ற முதியவர் ஒருவர் முயற்சித்த போது அந்த முதியவருக்காக அங்குமிங்கும் ஓடிய ஒரு பெண்ணின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து உள்ளது
கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் செல்ல வேண்டிய பேருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கிருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் வேகவேகமாக பேருந்து அருகே ஓடி, பேருந்து நடத்துநரிடம் பார்வையற்ற முதியவர் ஒருவர் வருகிறார், பேருந்தை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்
இதனை அடுத்து வேகமாக பெரியவர் பக்கம் ஓடிய அந்தப் பெண், பெரியவரின் கையைப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏற உதவி செய்தார். பேருந்து நடத்துனரும் அந்தப் பெரியவரை கையை பிடித்து பேருந்தில் ஏற்றி உட்கார வைத்தார். அதன் பின்னர் அந்த பெண் தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டார்
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் முதியோருக்கு உதவி செய்த பெண்ணின் தகவல் குறித்து தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணின் பெயர் சுப்ரியா என்றும் அவர் கேரளாவில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பார்வையற்ற ஒருவர் பேருந்துக்காக பேருந்தில் ஏற முயற்சித்து கொண்டு இருந்தபோது பேருந்து கிளம்பிவிட்டதை பார்த்து அவருக்கு உதவி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த காட்சியை மொட்டை மாடியில் இருந்து ஜோஸ்வா என்பவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ தான் தற்போது லட்சக்கணக்கானவர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது