இதையத்து, சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷின் வீட்டை சோதனையிட்டனர். மேலும் அவரது வீட்டிற்கு அரசுத் துறையில் பணியாற்றும் செயலர் வந்து போனதாகவும் தகவல் வெளியானது. அவர் இதேபோல் 10முறை கடந்தல் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிரது.
இந்த நிலையில்,ஸ்வப்னா சுரேஷின் அண்ணன் பிரைட் சுரேஷ் தனது தங்கை மீது ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்தார். அதில் தனது தங்கை பத்தாம் வகுப்பு கூட படிக்காதவர் என்றும் ஆனால் அவர் எப்படி தூதரகத்தில் வேலை பார்த்தால் என்று எனக்குத் தெரியவில்லை என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தால் கேராளாவில் உள்ள காங்கிரஸ்,. பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
ஸ்வப்னா சுரேஷ் இதுபோல் பத்துமுறை தங்கம் கடத்தியதாகவும் கூறப்படுகிறது.