இந்திய ஆழ்கடலில் காற்றாலை மின்சாரம்: சிங்கப்பூர் நிறுவனம் ஆய்வு..!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (17:01 IST)
இந்திய ஆழ்கடலில் காற்றாலை மின்சாரம்: சிங்கப்பூர் நிறுவனம் ஆய்வு..!
இந்தியாவிலுள்ள ஆழ்கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்தியாவின் பல இடங்களில் நிலப்பரப்பில் காற்றாலை நிறுவி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்து சிங்கப்பூர் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது 
 
இந்த இரண்டு மாநில கடல் பகுதிகளிலும் வீசும் காற்று 12 முதல் 18 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் 4,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் குறித்து சமீபத்தில் ஒப்பந்த புள்ளிகள் கோரியதை அடுத்து தற்போது இந்த திட்டம் குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்