ஜீன்ஸ் போட அனுமதிக்காததால் கணவரை கத்தியால் குத்திய மனைவி: மாமியார் புகார்.

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:23 IST)
ஜீன்ஸ் போட அனுமதிக்காததால் கணவரை கத்தியால் குத்திய மனைவி குறித்து அவருடைய மாமியார் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. புஷ்பாவுக்கு ஜீன்ஸ் போட வேண்டும் என்ற ஆசை இருக்கும் நிலையில் அவருடைய கணவர் அதற்கு அனுமதி மறுத்திருக்கிறார்
 
 இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஜீன்ஸ் போட கூடாது என கணவன் கூற, அதனால் இருவருக்கும் சண்டை வந்த நிலையில் ஆத்திரத்தில் புஷ்பா கத்தியை எடுத்து தனது கணவரை குத்தியிருக்கிறார் 
 
இதனை அடுத்து படுகாயமடைந்த புஷ்பாவின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து தனது மகனை மருமகள் புஷ்பாதான் கத்தியால் குத்திக் கொன்று விட்டார் என அவரது மாமியார் போலீசில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்