கோவிஷீல்டு இரண்டு தவணைகளுக்கு இடையே அதிகரிக்கும் இடைவெளி… அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவர் கருத்து!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (13:10 IST)
கோவிஷீல்டு இரண்டு தவணை தடுப்பூசிகளுக்கு நடுவே இடைவெளியை அதிகரிப்பது நல்ல அனுகுமுறை என வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் கடைசி தவணைக்கு இடையிலான இடைவெளி அதிகமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘ இந்தியா போன்ற கடினமான சூழலை எதிர்கொள்ளும் நாட்டில் இந்த அனுகுமுறை சரியானதுதான். காலதாமதம் என்பது உண்மைதான். ஆனால் அது தடுப்பூசி செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் மிகக்குறைவுதான்’ எனக் கூறியுள்ளார். இரு தவனைகளுக்கு இடையிலான காலத்தை 12 -16 வாரமாக மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்