அமெரிக்காவில் இருந்தும் இனி பணம் அனுப்பலாம்: கூகுள் பே தரும் புதிய வசதி!

வியாழன், 13 மே 2021 (07:30 IST)
இதுவரை இந்தியாவிற்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த கூகுள் பே பண பரிவர்த்தனை அமெரிக்காவிலிருந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கூகுள் பே மூலம் இந்தியாவில் உள்ளவர்களுக்குள் மட்டுமே பணம் அனுப்ப முடியும் என்ற நிலையில் தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் முயற்சியால் அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிற்கு இனி பணம் அனுப்பலாம் 
 
இதற்காக கூகுளே நிறுவனம் வெஸ்டர்ன் யூனியன் உள்பட ஒருசில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு இனி பணம் அனுப்பலாம் என்ற வசதி விரைவில் வரவுள்ளது
 
அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்புபவர்கள் வெஸ்டர்ன் யூனியன் அல்லது வேஸ் மூலம் பணம் அனுப்பலாம் என்றும் இதில் பணம் அனுப்புபவர்களுக்கு மட்டுமே ஒரு சிறிய தொகை கட்டணமாக பெறப்படும் என்றும் பணம் பெறுபவர்களுக்கு முழு தொகையும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்தும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பலாம் என்ற அறிவிப்பு வெளிவந்த இடத்தில் இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்