வயநாடு நிலச்சரிவு! 19 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 30 ஜூலை 2024 (09:32 IST)

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகியுள்ள நிலையில் பிரதமர் மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

 

 

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கேரளா, கோவா உள்ளிட்ட அரபிக்கடலோர மாநிலங்களிலும், வட மாநிலங்களில் அதீத மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி போட்டியிட்ட கேரளாவின் வயநாடு தொகுதியில் தொடர் கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டரை பயன்படுத்தி சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், மண்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

 

நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசியதாக கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

இந்த நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல்காந்தி இன்று வயநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்