பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்து இருப்பதை பார்க்கையில், அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்ல இருப்பதாகவும், இந்த பயணத்தின் போது போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மத்திய வெளியுறவு அமைச்சகம் பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தவில்லை.