வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: அரசு பரிசீலனை

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:36 IST)
ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அதற்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க வசதி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சட்ட அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
 
இதன் மூலம் ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதும் தடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்