டெல்லியில் ராபிடோ ஆட்டோக்களின் கட்டணம் மிகக்குறைவு என்று அவர் வியந்துள்ளார். மேலும், வெப்பமான வானிலை இருந்தாலும், டெல்லியின் வரலாற்று சிறப்பு மற்றும் மெட்ரோ சேவைகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன.
டெல்லி மெட்ரோ முற்றிலும் வேறுபட்ட அளவில் சுத்தமாகவும், எளிதாக பயணிக்கக்கூடியதாகவும் உள்ளது. சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்று பாராட்டியுள்ளார். மின்சார ஆட்டோக்கள் குறித்தும் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவருக்குப் பிடிக்காத விஷயங்களாக, டெல்லியின் வெப்பம், மாசுபாடு, தொடர்ச்சியான ஹாரன் சத்தம் மற்றும் குறைவான அசைவ உணவு ஓட்டல்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.