மேற்கு வங்கத்தில் இணையம், ப்ராட்பேண்ட் இணைப்புகள் துண்டிப்பு! – மாநில அரசு அறிவிப்பு!
ஞாயிறு, 6 மார்ச் 2022 (16:04 IST)
மேற்கு வங்கத்தில் சில மாவட்டங்களில் சில நாட்களுக்கு இணையம், ப்ராண்ட்பேண்ட் சேவைகள் துண்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் கிழக்கே வங்காளத்திற்கு அருகே அமைந்துள்ள மாநிலம் மேற்கு வங்கம். இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் பயங்கரவாத செயல்கள் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மார்ச் 7-9, மார்ச் 11-12 மற்றும் மார்ச் 14-16 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை ஒருசில மாவட்டங்களில் இணையம் மற்றும் ப்ராட்பேண்ட் சேவைகள் நிறுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.