வன்முறை பேச்சு... எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்ய முடியாது : டெல்லி போலீஸார் பதில் !

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:54 IST)
வன்முறை பேச்சு... எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்ய முடியாது : டெல்லி போலீஸார் பதில் !

டெல்லியில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருப்பவர்கள் மத்தியில் எழுந்த கலவரத்தில் இதுவரை 21 பேருக்கு மேல் இறந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பாஜக தலைவர்களையும் டெல்லி போலீஸாரையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய தலைவர்கள் மிது வழக்குப் பதிவு செய்யாதவது ஏன் என நீதிமன்றம் கேட்டிருந்தது.
 
இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை தரப்பில் பதில் அளித்துள்ளது.
 
அதில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
மேலும், வன்முறையைத் தூண்டியதாக தற்போது வழக்குப் பதிவு செய்வது என்பது அமைதி திரும்ப உதவாது.  வன்முறையை தூண்டியதாக தற்போதைய சூழலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என டெல்லி காவல்துறை பதில் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்