டெல்லி வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சரின் தோல்வியே காரணம் என ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தார். இதற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டுகள் தெரிவித்து, ரஜினிகாந்த்தின் கருத்துக்கு ஆதரவாக ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
இது போன்ற போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும், வன்முறையை அடைக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,சபாஷ் நண்பர் @rajinikanthஅவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.